எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருது15,17ம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தரான எல். நாஸ்சர், ஓய்வு பெற்ற வடகிழக்கு மாகாண அமைச்சின் கல்விச் செயலாளர் காதர் முகையதீனின் மகனான ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வரும் கலாநிதி அல்தாப் முகையதீனிடம் விடுத்த வேண்டுகோளின்கீழ் சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்திற்கு சிறுவர்தின நிகழ்வின்போது போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.
பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.நாபீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹில்மி, கிராமசேவை உத்தியோகத்தர் எல்.நாஸ்சர் மற்றும் மெக்ஸ் அபாயா நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.யூ.எம்.றியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வந்தாலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சர்வதேச சிறுவர் தினத்தில் இவ்வாறான ஒரு போட்டோ கொப்பி இயந்திரத்தை அன்பளிப்பு செய்ததற்காக அதிபர் ஏ.எல். நாபித் கலாநிதி அல்தாப் முகையதீனுக்கும் கிராம உத்தியோகத்தர் எல்.நாஸ்சர் மற்றும் ஆசிரியர் ஏ.வீ. ஜெளபர்ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.