எம்.ரீ. ஹைதர் அலி-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை ஸீன்னூர் இஸ்லாமிய சர்வதேச பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தளபாடங்கள் 2017.10.30ஆந்திகதி - திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மாவடிச்சேனை ஸீன்னூர் இஸ்லாமிய சர்வதேச பாலர் பாடசாலையின் தலைவர் ஜனாப். எம். சர்ஜூன் ஆசிரியர் அவர்களிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்கள் மாணவர்களுக்கான தளபாடங்களை கையளித்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையின் தலைவருமான ஜனாப். கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.