தில்லிருந்தால் நிந்தவூர் பிரதேச சபையை ஸ்ரீ.மு.காங்கிரஸ் கைப்பற்றட்டும் -சவால் விடுகிறார் முன்னாள் தவிசாளர் அஸ்ரப்

காரியாலய செய்தியாளர்-

தில்லிருந்தால் நிந்தவூர் பிரதேச சபையை ஸ்ரீ.மு.காங்கிரஸ் கைப்பற்றட்டும் என்று சவால் விட்டுக் கூறுகிறார் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தாஹீர்.

நேற்று மாலை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இம்போட்மிரர் இணையத்தள செய்திச்சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்...

கடந்த இரண்டு தேர்தல்களைச் சந்தித்து தனி ஒருவனாய் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து வென்று காட்டியிருக்கிறேன். எங்களூர் இளைஞர்கள் உறுதியானவர்கள். எதற்கும் சோரம் போகாதவர்கள். விளையாட்டுக்கழகங்களுக்கு 25000 பணம் கொடுத்து அல்லது இன்றைய இளைஞர் சமுதாயத்தைச் சீரளிக்கும் இதர பொருட்களைக் கொடுத்து இன்னும் இன்னும் மக்களையும் மண்ணையும் ஏமாற்றிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட தயாராகியுள்ளனர்.

கடந்த இரு தேர்தல்களில் குடும்ப ஆட்சி நடாத்த முடிந்தளவு முயற்சித்து படுதோல்வி அடைந்தவர்கள் இன்று வட்டாரம் மூலம் முழு நிந்தவூரையும் கைப்பற்றிவிடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால் அது முடியாத காரியம். இன்றைய இளைஞர்களும் பெரியவர்களும் மிக உசாராக இருக்கின்றனர். எந்த விளையாட்டையும் வெற்றி விளையாட்டாய் எதிர்கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். எனவே நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் நிந்தவூரில் சகல வட்டாரங்களையும் கைப்பற்றி பிரதேச சபை ஆட்சியை நாமே கையிலெடுப்போம் என்று நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளரும் தொழிலதிபருமான தாஹீர் அஸ்ரப் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -