போதையற்ற நாடு விழிப்புணர்வூ நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-

தே
சிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய போதை அற்ற நாடு விழிப்புணர்வு நிகழ்வு இன்று(29)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே .ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.போதைப் பொருள் பாவனை மூலமான பாதக விளைவுகள்,உட்பட பல்வேறு தலைப்புகளில் ஒளி,ஒலி காட்சிகள் மூலமான நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் தம்பலகம பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ.எம். ஜிப்ரி , பிரதேச சுகாதார பரிசோகதர்கள் , தம்பலகாமம் பொலீஸ் பொருப்பதிகாரி தினேஷ் கதரகமுவ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதேச இளைஞர்கள், சர்வ மத தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் போதையை தடுத்து நிறுத்துதல் சம்மந்தமாக உரையாற்றியதையும் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளும் இளைஞர் சேவை உத்தியோகத்தரினால் செய்து காட்டப்பட்டதையும் படத்தில் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -