அஷ்ரப் ஏ சமத்-
அட்டாளைச் சேனையைச் சோ்ந்த ஆசிரிய ஆலோசகா் எஸ்.எல் மன்சூரின் இரண்டு நுால்கள் கொழும்பில் அறிமுகம் வைபவம் நேற்று முன்தினம் 29ஆம் திகதி மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் வை.எம்.எம்.. ஏ தேசியத் தலைவா் எம்.என்.எம் நபீல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது மன்சூர் எழுதிய ”விலாசம் தேடும் விழுதுகள் ரேங்கியா ” மற்ற நுாலான கல்வியின் நோக்கமும் போக்கும் அறிமுகம்” என இரு நுால்கள் வெளியீட்டு வைக்க்பட்டன. நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதியும் வக்பு நீதிமன்றத்தின் தலைவருமான யு.எல். அப்துல் மஜீதிடம் பெற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் டொக்டா் தாசீம் அகமத், பேராசிரியா் சந்திரசேகரன் சட்டத்தரணி மசூர் மொளலானாவும் உரையாற்றினாா்கள்.