யார் துரோகிகள்? “சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை” நூல் வெளியானது



எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன் -

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய யார் துரோகிகள்? “சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை” என்ற, பலராலும் பல்வேறு விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட நூல் 2017-10-18 ஆம் திகதி சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி என்.ஆரீப் தலைமை வகித்தார். தொடக்க உரையை பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் நிகழ்த்தினார்.

மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்த குறித்த நூல் மற்றும் சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கையில் உள்ள நியாயங்களையும் கோரிக்கை கிடப்பில் போடப்ப்படுமிடத்து இந்த ஊர் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பனபோன்ற கருத்துரைகளை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீலும் வர்த்தக சமூகத்தின் தலைவரும் லங்கா அசோக் லேலன்ட் கிழக்கு நிறுவனத்தின் நிதி மற்றும் செயற்பாட்டுத் தலைவர் ஏ.ஆர்.முகம்மட் அஸீம் ஆகியோர் வழங்கினர்.

பிரதம உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.முகம்மட் சதாத் நிகழ்த்தினார்.

நூறுல்ஹக்கின் யார் துரோகிகள்? “சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை” என்ற நூல், சாய்ந்தமருதுக்கு என உள்ளுராட்சி சபையை கோருவதற்கான நிறைய தடயங்களை தருகின்றது மட்டுமல்லாது ஊரின் வரலாற்றையும் தொட்டுச்செல்கின்றது.

நூலின் தலைப்பான ‘யார் துரோகிகள்?’ என்ற வாசகம் வைத்திய கலாநிதி என்.ஆரீப் மற்றும் சதாத் உள்ளிட்டோரால் வித்தியாசமான வியாக்கியானங்களுடன் விபரிக்கப்பட்டது. அரசியல்வாதிகளா?அல்லது மக்களா? என்ற கேள்விகளும் இங்கு தொடுக்கப்பட்டது.

அடையாள நூல் வெளியீட்டில் முதற்பிரதிகளை கல்முனை சட்டத்தரணிகள் சங்க பொருளாளர் ஏ.எல்.எம்.றியாஸ் (அலறி) மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம்.இப்ரஹிம் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் சபைக்கு பிரசன்னமான அனைவருக்கும் இலவசமாக நூல் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வின்போது நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -