மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் பற்றி பிரபா கணேசனின் அறிக்கைக்கு சட்டத்தரனி எஸ்.எம்.ஏ. கபூர் கடும் கண்டனம்


ண்மையில் ரோஹிங்கியா அகதிகள் இலங்கைக்கு எதிர்பாராத விதத்தில் வந்து அடைக்கலமாக தங்கள் உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள கரைசேர்ந்த இவர்களுக்கு இலங்கை அரசு மனிதாபினமான முறையில் நடத்தியமைக்கு நாங்கள் நன்றி கூறும் இவ்வேளையில் திரு. பிரபா கணேசனின் அண்மைக்கால அறிக்கை முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் அவர்கள் இங்கு தற்காலிகமாக தங்கி இருக்க ஐக்கிய நாடுகளளின் மனித உரிமைக்கான ஆணைக்குழுவினர் அவர்களை இங்கு இடைக்காலமாக இடைநிறுத்தி இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக திரு. பிரபா கணேசன் அவர்கள் முஸ்லிம்களின் சனத்தொகையை இலங்கையில் அதிகரிக்கும் எனக்கூறுவது மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைந்துள்ளார். என்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறுபாண்மை மக்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள இன்னுமோர் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்நாட்களில் இப்படிக்கூறுவது மிகவும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் எம்மக்கள் மத்தியில் நிச்சயம் ஏற்படுத்த வழிவகுக்கின்றது என்பதனை இந்த முன்நாள் பிரதி அமைச்சருக்கு நாம் நாகரீகமாக கூறிவைக்க விரும்புவதாகவும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலக நாடுகளில் உள்ள மக்கள் அகதிகளாகவும் தங்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதற்காகவும் பரவலாக ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் குடியேறுவதையும் அவர்களை அந்நாடுகள் அங்கீகரித்து தற்காலிகமாக தங்குவதற்கு ஆவண செய்வதையும் நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம். 

அந்த வகையில் இலங்கையிலிருந்த தமிழ் பேசும் மக்கள் கடந்த காலங்களில் ஏனைய நாடுகளில் தஞ்சம் புகுந்து இன்று நலமுடனும் பாதுகாப்புடனும் வசதி வாய்ப்பாகவும் நலமாகவும், நன்றாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மையாகும். அவர்களை அன்று அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளாமல் விட்டிருந்தால் இச்சிறுபாண்மையான இவர்களுக்கு இந்நாட்டில் என்னதான் நடந்திருக்கும் என்பதை நாம் அறியாதவர்களல்ல எனவும் தெரிவிக்கும் சட்டத்தரணி கபூர் அவர்கள் இவ்வாறான அறிக்கைகள் இக்கால கட்டங்களில் வெளியிடுவது மிகவும் மனவருத்தத்திற்குறியது எனவும் இது இப்பொழுது இவர்களுக்கு தேவைதானா? என கேள்வி கேட்க விரும்புவதாகவும் அவ்வறிக்கையில் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -