ஐக்கிய தேசிய ஆட்சி காலத்திலே மலையக மக்கள் பல்வேறு உரிமைகளை பெற்றுவந்துள்ளனர் கடந்த தேர்தலின் போது தலவாக்கலையில் இம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கமசிங்க அவர்கள் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 50 ஆயிரம்வீடுகளை தருகிறேன் ஆனால் 50 ஆயிரம் சாராயம் போதல்கலை தரமாட்டேன் என்றால் அந்தவாக்குறுதி இன்று நனவாகியுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸஸ்னன் தெரிவித்தார் அட்டன் டன்பார் மைதானத்தில் 29, 10 2017 காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்
நுவரெலியா மாவட்ட மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டனியை நம்பி வாக்களித்து நல்லாட்சியை முக்கிய பங்கு வகித்தமைக்கான பலனை இன்று அனுபவிக்கின்றோம் கடந்த காலம் தொட்டு ஐக்கிய தேசிய ஆட்சி காலத்திலே மலையகத்திற்கு உரிமைகள் கிடைக்க பெற்றுள்ளது அந்த வகையில் இந்து கலாசார அமைச்சும் ஐக்கியதேசிய கட்சியினால் உறுவாக்கப்ட்டது பின்னர் ஆட்சி மாற்றத்தால் அந்த அமைச்சு திணைக்களமாக மாற்றப்பட்டது பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிமைத்தப்பின்மீண்டும் அந்த அமைச்சு எமக்கு கிடைத்தது இவ்வாறு ஒரு சமூகத்தின் தேவை அறிந்தே சேவை செய்வது ஐக்கிய தேசிய கட்சியே லயன் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் திகாம்பரத்தின் பணி சிறந்து முன்னெடுக்கப்படுகின்றது அதே போல கல்வித்துறையிலும் பாரிய வளர்சியடைய இந்த அரசினூடாக முன்னெடுக்கமுடிகின்றது கடந்த இரண்டு வருடத்தில் 29 மில்லியனை வழங்யதுடன் வருகின்ற ஆண்டில் 450 மில்லியன் ருபா நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மலையக சமூகம் தலை நிமிர வேண்டுமாயின் அந்த சமூகம் கல்விச்சமூகமாகமாற வேண்டும்.
ஆகவே தான் 25 பாடசாலைகளை தரமுயத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் அத்னூடாக கணித விஞ்சான படங்களில் கல்வி வவளர்ச்சியைஉயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம் அத்தோடு சுகாதரத்தை மேம்படுத்த சுகாதார அமைச்சரினூடாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாக்கு 150 மில்லியன் ருபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் டிக்கோயா மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களையும் தாதியர்களையும் அதிகளவில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார் மேலும் தமிழ் முற்போக்கு ககூட்டனியினூடாக எமது பயணம் தொடரும்என்பதில்எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றும் அவர்மேலும் தெரிவித்தார்.