இதை கவனித்த ஆசிரியர் கானை அழைத்து, அவனது கன்னத்தில் பளாரென ஓங்கி அறை விட்டார். கான் அழுதுகொண்டு அவனது இருக்கையில் சென்று அமர்ந்தான். மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்ற அவன், வழியில் பார்வை மங்கலாக தெரிந்ததாக தனது பெற்றோரிடம் கூறினான். பள்ளியில் ஆசிரியர் அடித்ததையும் கூறினான்.
இதையடுத்து, கானின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு கண்ணில் 90 சதவீதம் பார்வை பறிபோனது என தெரிவித்துள்ளனர். மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கானின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை பள்ளி மீதும், ஆசிரியர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.
இதுதொடர்பாக, கானின் தந்தை ரிஸ்வான் கூறுகையில், எனது மகனுக்கு 90 சதவீதம் பார்வை பறிபோயுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தன் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், ஆசிரியரே இப்படி நடந்து கொண்டால் மாணவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர் கன்னத்தில் அறை விட்டதால் மாணவனின் ஒரு கண்ணில் பார்வை பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (மா.ம)