கனியமணல் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த அரசாங்க காலத்திலிருந்து நீண்டகாலமாக தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் தங்களால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினர். கட்சி, இன, மதபேதங்களுக்கப்பால் அமைச்சர் தமது பணிகளில் நியாயமாக நடந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துத் தந்தமை தமக்கு வரப்பிரசாதமெனவும் கூறினர்.

பொருட்களின் பெறுமதிச்சேர்க்கையை (Value addition) அதிகரித்து இந்தப்பிரதேசத்தின் பொருளாதரா நலனுக்கு வலுசேர்க்க அமைச்சர் மேற்கொண்டுவரும் இடையறா முயற்சிகளுக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பேண மேற்கொண்டுவரும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த அவர்கள் தமது பிரதேசத்தை முன்னேற்றுவதற்கு மேலும் உதவவேண்டுமென அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்தனர்.

தொழிற்சங்க பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் பொருட்களின் சேர்க்கை மூலம் மேலம் 500பேருக்கு தொழில் வழங்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும், புல்மோட்டை மாத்திரமன்றி, அதற்கு அருகிலுள்ள பல கிராமங்கள் இதன் மூலம் பொருளாதரா நலன்களைப் பெற்றுக்கொள்ள இதன்மூலம் வழியமைக்கமுடியுமெனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -