ஊடக பிரிவு-
ஜனாதிபதி மான்பு மிகு மைத்திரி பால சிறிசேன பிரதமர் ரனில் விக்ரம சிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெளரவ வஜிர அபேவர்தன உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டதாவது 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக கணி உறுதிகள் இல்லாமல் தவிர்த்த இம்மக்களுக்கு உறுதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக நான் பட்ட சிரமங்களுக்கு இன்று நல்லதோர் விடிவு கிட்டியிருக்கின்றது.
எமது மக்களுக்கு இன்னும் பல நிறைவேறாத தேவைகள் இருக்கின்றன அவற்றையும் நாம் அடையாளங் கண்டு இருக்கின்றோம் அவற்றை நிறைவேற்றி கொடுப்பதற்காக பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம் அரச தலைமையிடமும் அவற்றை சமர்ப்பித்திருக்கும் சமவேளையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி எமது பிராந்தியங்கள் வளர்ச்சியடைய நாம் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். மேற்படி நேற்றைய ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை மூலம் அதிகமான பொது மக்கள் நன்மையடைந்ததையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சைவ பிரகாசா பாடசாலையின் பழைய மாணவரான கே.காதர் மஸ்தான் அவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் கலாசாலை அதிபர் ஆகியோரினால் கெளரவ சின்னங்கலும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.