பின்னோக்கி ஓடுதல் போட்டியில் டாக்டர் ஆரீப் தங்கம் வென்றார்!!

கிழக்குமாகாண மற்றும் பிராந்திய சுகாதார பணிமனைகள் இணைந்து நடாத்திய வருடாந்த விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி.பைசல் காஸீமும் கௌரவ அதிதியாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.அன்சாரும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற 40 வயதுக்கு மேற்பட்ட பின்னோக்கி ஓடுதல் போட்டியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்று நோய்ப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் வைத்திய கலாநிதி என்.ஆரீப் தங்கப் பதக்கம் வென்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -