திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் சிறாஜ் நகர் சந்தியில் மேற்கொண்ட சுற்றி வலைப்பில் கேரளா கஞ்சா வைத்திருந்த இரு நபர்களை நேற்று (24) செவ்வாய் கிழமை காலை தம்பலகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமிருந்து 2 கிலோவும், 100 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவின் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தம்பலகாமம் 97சிராஜ் நகர் சந்தியில் நேற்று காலை 09-30 மணியலவில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் பிரகாரம் இவ்விரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அன்ஸார் தெரிவித்தார்.
கிண்ணியா , மற்றும் வாணாறு பகுதிகளைச் சேர்ந்த இந் நபர்கள் இருவரும், பணப் பையில் மறைத்து பயணிகளைப் போல் நடமாடித் திரிந்ததாகவும், இவர்கள் இருவரும் இப்பகுதியில் கேரளா கஞ்சா விநியோகம் செய்து வருபவர்கள் எனவும் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று (25) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.