எம்.ஜே.எம்.சஜீத்-
2017 ஆம் ஆண்டுக்கான அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பாடசாலை புடைக்காட்சி நிகழ்ச்சி திட்டம் கல்லூரியின் கல்விக்கான உப பீடாதிபதி எம்.பி.ஏ.அஸிஸ், கல்விக்கான இணைப்பாளர் ஏ.பாறுக் ஆகியோரின் தலைமையில் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் சம்மாந்துரை கல்வி வலய பாடசாலைகளில் நடைபெற்ற இறுதி நிகழ்வு நேற்று (25) சம்மாந்துரை தாறுஸலாம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துரை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், கௌரவ அதிதியாக தேசிய கல்விக் கல்லூரியின் நீதி, நிருவாகத்திற்கான உப பீடாதிபதி எம்.ஏ.கலீல் மற்றும் ஆசிரியபெருந்தகைகளும் கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.