றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டது ஏன் என்று விளக்குகிறார் நாமல் ராஜபக்‌ஷ

த்தேச அரசியலமைப்பை நிறைவேற்ற சர்வதேச அழுத்தங்களைப்பெறவே றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸகூறினார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்...

மியன்மார் அகதிகள் தொடர்பான பிரச்சினையை விவாதப்பொருளாக்கினர். கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்தஅகதிகள் அச்சுறுத்தப்பட்டனர். சர்வதேசங்களுக்கு செய்திகளை கொண்டு சென்றனர்.இனவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.இதில் இம்முறை குறித்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த விதமான பிரச்சினைகளையும்வழங்காமல் கைதாகியுள்ளனர் என்ற விடயமே இது இவ்வரசினால் நடாத்தப்பட்ட நாடகம் என்பதைதெளிவாக்குகிறது.அவர்கள் ஆடச் சொன்னால் ஆடுவார்கள்.அடங்கச் சொன்னால் அடங்குவார்கள்.

நன்றாக சிந்தித்து பாருங்கள்! இவர்கள் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இதனை செய்திருந்தால் அவ்வளவுஇலகுவில் கைதாகியிருக்க மாட்டார்கள்.உச்ச கட்ட இனவாதத்தை பரப்பி இருப்பார்கள்.

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் சர்வதேச தலையீடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.உலகநாடுகள் அனைத்தும் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்கள் நாடுகள் சிலஉள்ளடங்கலாக சில நாடுகள் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.இதற்கு இவ் அரசியலமைப்பினூடாக சிலநாடுகள் தங்களது நலனை மையப்படுத்தியுள்ளது போன்ற சில காரணங்கள் உள்ளன. ஒரு நாட்டுக்கு சாதகம்என்றால் மற்றைய நாடுகளுக்கு அது பாதகமாக அமையலாம். இதுவெல்லாம் வல்லரசு நாடுகளின் இராஜதந்திரநகர்வுகள்.

இந் நாட்டின் அரசியலமைப்பு வரைபில் வெளிநாட்டு சட்ட வல்லுனர்கள் பலர் பங்களிப்பு செய்துள்ளதாகவும்தகவல்கள் உள்ளன. குறித்த இச் செய்தியினூடாக இலங்கையில் சிறுபான்மையின மக்களை திருப்தி செய்யும்வகையிலான அரசியலமைப்பு மாற்றம் என்ற செய்தி கொண்டு செல்லப்படும். இதன் மூலம் எதிர்க்கும் நாடுகளைஅணைத்துக் கொள்ளலாம்.

தற்போது இவ்வரசு கொண்டுவர சிந்திக்கப்படும் அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸபெரும் சவாலாக அமைந்துள்ளார்.அவரை எதிர்கொள்ள பெரும் பலம் அவசியம்.குறித்த நிகழ்வினூடாகசிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பின் தேவை உணர்த்தப்படுவதால்,நடுநிலை நாடுகள் பெரும் ஆதரவைவழங்கும். இதனை முன்னாள் ஜனாதிபதி எதிர்க்கும் போது அவருக்கு எதிராகவும் குறித்த எதிர்க்கும் நாடுகளுக்குஎதிராகவும் பலமிக்க ஆதரவு இலங்கை அரசுக்கு கிடைக்கலாம். இப்படியான சிலவற்றை கருத்தில் கொண்டுதிட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றே இந்த அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமாகும்.

இந்த அரசாங்கம் 62 லட்சம் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் 58 லட்சம் வாக்காளர்களை புறக்கணிக்கமுடிவெடுத்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.

இதற்கும் முஸ்லிம் அப்பாவி அகதிகளை இவ்வரசு கருவியாக பாவித்துள்ளது. இவ்வரசு தனது விடயங்களை சாதிக்கஎதனையும் செய்யத் தயங்காது என்பதை இலங்கை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -