ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவு வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியோடு இணைந்து நடாத்தப்பட்டு வரும் இரத்ததான முகாம் இன்றும் (07) ம் திகதி மிகவும் சிறப்பான முறையில் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நாடாத்தியது.
இவ் இரத்ததான முகாமில் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு தங்களின் இரத்தங்களை தானமாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தங்களை வழங்கிய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் என்றும் பூரண சுகத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்க பிராத்திப்போமாக!