மறைந்த தொண்டமான் பெயரினை வைத்து ஊழல் செய்வதை அனுமதிக்க முடியாது. அமைச்சர் பழனி திகாம்பரம்

றைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரினை வைத்து ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

200 வருடகால வரலாற்றை கொண்டுள்ள மலையக மக்களாகிய நாம் கடந்துவந்த பாதைகளை மறந்துவிடமுடியாது. இன்றைய எமது உரிமை ரீதியான போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் பலர் உள்ளனர். மூத்த தொழிற்சங்கவாதி கோ.நடேசய்யர் முதல் இன்றுவரை பலரும் எமக்கு முன்னுதாரணங்களாக இருந்து வந்துள்ளனர். அந்தவகையில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களும் முக்கியமானவர். தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அனைவராலும் மதிக்கப்படகூடியவர். அத்தகைய மனிதரின் பெயரில் மன்றங்களை அமைத்து ஊழல் மோசடிகளில் ஈடுபட அனுமதிக்க முடியாது.

கடந்த அரசாங்கத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 2015 ஆண்டுவரை 1328.72 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டு இன்றுவரையும் குறித்த 1328.72 மில்லியன் ரூபாவிற்கான கணக்குவழக்கு, கணக்காய்வு என்பன அமைச்சிற்கு கையளிக்கப்படவில்லை. பெருந்தோட்ட மலையக மக்களுக்கென கிடைக்கப்பெற்ற நிதிவளங்களை வரப்பிரசாதங்களை தனிமனித சுகபோக வாழ்க்கைக்காக செலவழித்து மோசடி செய்துள்ளனர். 

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த மன்றத்தின் வாழ்நாள் உறுப்பினராகவிருக்கும் ராமநாதன் ஆறுமுகனும், முத்துசிவலிங்கமும் அவர்களுடைய சகாக்களுமே. இதுத்தொடர்பில் பல முறை பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் இந்த ஞாபகார்த்த மன்றத்திலிருந்து மன்றத்தின் ஆலோசகராகவிருந்த இந்தியாவில் உள்ள ஒரு குறித்த பெண்மணிக்கு சொந்தமான செரண்டடி ஆலோசனை சேவை தனியார் கம்பனிக்கு (Serenity Consultancy service (pvt) ltd) ஒரு மில்லியன் டொலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எதற்காக அனுப்பி வைக்கப்பட்;டது என்பது தொடர்பில் இதுவரை ஆவணங்கள் இல்லை. இதுபோன்ற பல மோசடிகளை செய்து மறைந்த தொண்டமானின் பெயரினை கலங்கமேற்படுத்தியவர்கள்தான் இன்று நான் அவருடைய பெயரை இல்லாமலாக்க வழி செய்வதாக குற்றம் சுமத்துகின்றனர். மறைந்த தொண்டமான் ஆரம்பித்த இதே தொழிநுட்ப கல்லூரிக்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி கல்லூரி அபிவிருத்தி பணிகளுக்காக 199 மில்லியன் ரூபாவினை நான் பெற்றுக் கொடுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதுத்தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருப்பது அவசியமாகும். இந்த மோசடிகள் காரணமாகவே சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு கீழாகவியங்க 4 நிறுவனங்களையும் நேரடியாக அமைச்சின்கீழ் கொண்டுவந்து அதனை அமைச்சின் செயலாளர் நிர்வகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

 இன்று முறையாக எந்தவித ஊழல்களுமில்லாமல் சுயாதீனமாக வெளிப்படையாக நான்கு நிறுவனங்களிலும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முறையாக கணக்குவழக்குகள் இட்டைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊழல் செய்தவர்கள், இன்று தேர்தல் காலம் நெருங்கியதால் தேர்தல் நாடகமாக இதனை மேடையேற்றுகின்றனர்.


2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். மலையக மக்களின் கணவாகவே மட்டுமே இருந்த வீட்டு உரிமையினையும் காணி உரிமையினையும் நனவாக்கி 7 பேர்ச் காணியில் தனி வீடு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வரலாற்றிலேயே காணி உரிமை எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்தமையின் இவ்வருடத்தில் மாத்திரம் 6624 காணி உரித்து பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். காலங்காலமாக பெருந்தோட்ட மக்கள் புரக்கணிக்கப்பட்டுவந்த பிரதேச சபை சட்டங்கள் திருத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக இருந்த பிரதேச சபைகள் 12 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மலையக பெருந்தோட்ட புரங்களுக்கு சேவையாற்றுவதற்கென ஒரு அதிகாரசபை இல்லாத நிலையில் இன்று மலையகத்துக்கென மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அரசியல் சார்ந்த அபிவிருத்தி சார்ந்த எம்முடைய முன்னெடுப்புக்களை சகித்துக் கொள்ளமுடியாத பேர்வழிகள் அரசியல் சுயலாபத்திற்காக மக்களை திசைத்திருப்ப முயல்கின்றனர். மக்கள் சேவை செய்த மனிதர்களின் பேர்களை மாற்றும் அலவிற்கு மாற்று தரப்பினர் செய்யும் பணிகளுக்கு முற்றுகட்டையிடும் அளவிற்கு பாடசாலையிலும் அதற்கு வெளியிலும் சுயநல அரசியல் செய்பவர்கள் நாங்கல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -