க.கிஷாந்தன்-
தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீபாவளி பண்டிகை்காக ஒவ்வொரு வருடமும் அரசாங்த்துடனும், கம்பனிகளுடனும் பேசி தோட்டத்தொழிலாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரிஸ் தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்காக கடந்த காலங்களில் அவரவருக்கு ஏற்றவகையில் 10000 ரூபா 7500 ரூபா என முற்பணத்தினை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
ஆனால் இவ்வருடம் பல தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் காலங்களில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தேரிவித்தார்.