மருதமுனையின் கல்விநிலையை மெருகூட்டும் கலந்துரையாடல்!!!

தொய்வடைந்து செல்லும் மருதமுனையின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மருதமுனை கல்வி, மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் (SESEF) ஏற்பாட்டில் 2017-09-30 ஆம் திகதி மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய கூட்டமண்டபத்தில் அமைப்பின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழத்தின்பதிவாளருமான எம்.எப். ஹிபத்துல் கரீம் தலைமையில் ,அமையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீதின் ஒருங்கிணைப்புடனும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமும் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்;.ஏ.ஜலீல் மற்றும்அமையத்தின் பிரதம ஆலோசகர் கால்நடை அபிவிருத்தி திணைக்கள மாகாணப்பணிப்பாளர் டாக்டர்எம்.ஏ.எம்.பாஸி (காமில்) ஆகியோரும் அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ .எல்.ஏ .சக்காப் ,தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியல்பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜுனைடீன், கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப். மர்சூக், பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.றஹீம், கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரியுரையாளர் றியாஸ் அஹமத் போன்றோரும் கலந்துகொண்டனர்.

SESEF அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்ற மருதமுனையின் கல்வி அபிவிருத்தி குறித்த மேற்படி விசேட கலந்துரையாடலில்
2016, 2017 ஆகிய வருடங்களில் மருதமுனை பாடசாலைகளின் பெறுபேறுகளின் வீழ்ச்சி நிலை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இங்கு பாடசாலைகளின் அதிபர்கள் குறித்த ஆண்டில் மாணவர்கள் பெற்ற அடைவுகள் தொடர்பில் புள்ளிவிபரங்களை சமர்ப்பித்ததுடன் வீழ்ச்சிக்கான அவர்கள் தரப்பு காரணங்களையும் முன்வைத்தனர். இதன்போது சம்மந்தப்பட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களும் பிரசன்னமாகியிருந்ததால் அதே இடத்தில் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது மாகாணப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் எதிர்கால கல்வி முன்னேற்றம்தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பொருத்தமான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -