பாறுக் றியாஸ்-
நேற்று 23.10.2017 திங்கட்
கிழமையன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கல்குடா மஜ்லிஷ் சூறா சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சூறா சபையின் தலைவர் சட்டத்தரணி சஹாப்தீன் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். பிரதேச செயலாளரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்ற இக் கூட்டத்தில் அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சூறா சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டம் பிரதேச செயலாளரின் உரையுடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதைனை தொடர்ந்து தலைவரினால் தலைமை உரையும், செயலாளர் ஹாமிட் மௌலவி அவர்களினால் கடந்த கூட்டத்தின் கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டதுடன் உறுப்பினர்களின் கருத்துகளும் பிரதேச செயலாளரினால் கேட்டறியப்பட்டன.
இதன் போது சட்டவிரோதமாக தங்களுடைய அமைப்பின் பெயரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடத்துடிக்கின்ற பழைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றி பல உறுப்பினர்கள் காரசாரமான விமர்சனங்களையும், கன்டனங்களையும் தெரிவித்திருந்தனர். தமது பதவிக் காலம் முழுதும் கோமாவில் இருந்து தமது அரசியலுக்கு மட்டும் சூறா சபையினை பழைய நிர்வாகம் பயன்படுத்திய விதமும் பதவிக்காலம் முடிந்த பின்பும் முறைகேடாக அதில் நிலைத்திருந்ததும் பிரதேச செயலாளருக்கு உறுப்பினர்களால் விளக்கப்பட்டன.
தாங்கள் புதிய நிர்வாக சபையினை பொதுக் கூட்டத்தின் மூலம் தெரிவு செய்து அதனை பிரதேச செயலகத்திலும், சமூக சேவை திணைக்களத்திலும் பதிவு செய்த பின்னர் இந்த சூறா சபையின் செயற்பாடுகளுக்கும், அதன் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக பதவிமோகம் கொண்டவர்களால் பதவியிலிருந்து துரத்தப்பட்ட பின்னர் கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்திருக்கின்றமை அவர்களின் கையாளாகாத தனத்தினையும் வங்குரோத்து மனப்பான்மையினையும் வெளிப்படுத்துவதாக உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரியப்படுத்தினர்.
பின்னர் இந்நாசகார செயல்களை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மாணம் எடுக்கப்பட்டதுடன், எதிர்கால வேளைத்திட்டங்கள் பற்றியும் பல தீர்மாணங்கள் எடுக்கப்பட்டு
இறுதியாக செயலாளரினால் நன்றியுரையுடன் கூட்டமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.