எம்.ரீ. ஹைதர் அலி-
இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாண கராத்தே சம்பியன் தொடரில் காத்தான்குடியினை சேர்ந்த இரு சகோதரர்கள் சாதனை
இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய 2017ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண கராத்தே சம்பியன் சுற்றுத்தொடர் 2017.10.15ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது 40 கிலோ கிராமிற்குற்பட்ட சிறார்களுக்கான பிரிவில் கலந்துகொண்ட MFMS. அப்துல்லாஹ் ஷஹ்மி என்ற 11 வயது மாணவன் ஆண்கள் குமிட்டி (Kumite – male) பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதோடு ஆண்களுக்கான காட்டா (kata) சிறுவர் பிரிவில் வெண்கலப்பதங்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் ஆண்களுக்கான காட்டா (Kata) சிறுவர் பிரிவில் பங்குபற்றிய MFMS. ஷஹ்ரி என்ற 9 வயது மாணவன் வெள்ளிப் பதங்கத்தினை சுவீகரித்தார்.
இதன்மூலம் இவ்விரு மாணவர்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் தேசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.