சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை




அகமட் எஸ். முகைடீன்-

ல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு இன்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம்செய்து அவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இவ்விஜயத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, பொறியியலாளர் ரி. சர்வாணந்தன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது அம்மைதானத்தின் பிரதான பார்வையாளர் அரங்கு, ஓடுபாதை மற்றும் அதிதிகள் நுழைவாயில் போன்றவற்றின் அமைவிடத்தின் பொருத்தப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்தோடு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பார்வையாளர் அரங்கு நிர்மானம் தொடர்பில் அமைச்சின் தொழில்நுட்ப பிரிவினால் சில பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குறித்த பார்வையாளர் அரங்கில் சிற்றுண்டிச்சாலை மற்றும் ஜிம் நிலையம் என்பவற்றை உள்ளடக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதோடு குறித்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஒப்பந்தகார நிறுவனத்திற்கு வழங்கினார்.

மேற்படி இரு வேலைத்திட்டங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் முடிவடைந்து அவை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளதோடு உள்ளக விளையாட்டரங்கு, பிரதான பார்வையாளர் அரங்கு, மற்றும் ஓடுபாதை உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் அடுத்த கட்டமாக அக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -