இலங்கை முஸ்லிம்களும் அவர்களது உள்ளூர் இடம்பெயர்வும்.

தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-


க்டேபார் என்றால் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அழிக்க முடியாத பதிவினை கொண்ட மாதமாகும்.உலககில் பல பிரபலங்கள் பிறந்த மாதமும் இதுவாகும்.இன்றைய ஒக்டேபார் மாதத்தின் இறுதிவாரம என்பது வடக்கு முஸ்லிம்களின் தாயக மண்ணை விடுதலைப் புலிகளினால் அபகரிக்கப்பட்ட வரலாற்றை கொண்டது என்பது உண்மையாகும்.

சரித்திரங்கள் என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் நல்வாழ்வுக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் என்பதை பலர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம்.அந்த வரலாறு தான் வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டபட்ட நாளாகும்.அதற்கு பல பெயர்களை கொண்டு பலரும் அழைத்துவருகின்றனர்..இந்த அழபை்புக்கு நேற்றுடன் 27 வருடங்கள் ஆகின்றது.இவ்வாறானதொரு நிலையில் அரசியல் பிரவேசத்தில் இருந்த அரசியல் தலைமைகள் இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளதை நன்றியுள்ளவர்கள் ஒருபோதும் மறந்து பேசமாட்டார்கள்.ஆனால் இதனை அரசியலாக தனக்கு பிரபலம் கிடைக்க வேண்டும் என்று ஒரு சிலர் பதவிகளுக்காகவும்,சலுகைக்களுக்காகவும் ஓலமிட்டுவருகின்ற நிலையில் இந்த வடக்கு முஸ்லிம்களின் உணர்வுடன் சங்கமித்தவன் என்ற வகையில் ஆக்க பூர்வமானதும்,இம்மக்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட வேண்டும் என்ற நோக்குடன் சில கருத்துக்களை முன் வைப்பது வாசகர்கள் தங்களை புடம் போற்றுபார்க்க முடியும் என்பது எனது எண்ணமாகும்.


வெளியேற்றமும்,வரவேற்பும்


வடமாகாணத்தில் இருந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களும்,குறுகிய கால அவகாசத்துக்குள் துரத்தப்பட்டதன் வெளிப்பாடு அவர்கள் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு வரவேண்டிய நிலையேற்பட்டது.இவ்வாறு பாதுகாப்பு தேடிவந்த மக்களை வரவேற்று அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தவர்கள் பாராட்டக் கூடியவர்கள்,அவர்களுக்கு என்றும் இடம் பெயர்ந்த மக்கள் நன்றியுள்ளவர்கள் என்பதை துணிந்து பறைசாற்ற முடியும்,இந்த மக்களின் அவலங்களை உணர்ந்ததனால் கல்வி முதல் திருமணம் வரை அனைத்து விடயங்களுக்கும் அம்மக்களை வரவேற்றவர்கள் ஆற்றிய பங்களிப்பு வடக்கு முஸ்லிம்களின் வரலாறு சரியாக எழுதப்படுகின்ற போது அது முக்கிய பதிவாக இருக்கும் என்பதில் எவ்விதசந்தேகமும் இருக்க முடியாது..


இவ்வாறானதொரு சூழலில் முன்னாள் அமைச்சர்களான அஷ்ரப், எஸ்.எஸ்.எம்.அபூபக்கர்,நூர்தீன் மசூர் அதன் பிற்பாடு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோர் இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் பற்றி இன்னும் சிலர் அறியாமல் இருப்பதுடன் இன்று இந்த மீள்குடியேற்ற செயற்பாடுகளை கொச்சைப்படுத்தி வருவதையும் எம்மால் காணமுடிகின்றது.மக்கள் அளித்த வாக்கு அந்த மக்களின் விமோசனத்திற்காக இருக்க வேண்டுமம் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் இருந்துவந்துள்ளதை தனிப்பட்ட முறையிலும்,மீள்குடியேற்றம்

இடம் பெறும் பகுதியில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள்.


வருடங்களின் பின்னர் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் இன்று சில முகநுால் காரர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.இவர்கள் வெறும் எழுத்துக்களுக்குள் மட்டும் அலங்காரம் காட்டுபவர்கள் அன்“றி இவர்களினால் ஒரு கல்லைக் கூட இந்த மக்களுக்காக நட்டிக் கொடுக்க முடியாது என்பது தெளிவாகும்.இப்படியான நிலையில் கடந்த அரசாங்கத்திலும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை எல்லோரும் அறிவார்கள்,அது போல் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம் பெயர் கட்சியினது சித்துவிளையாட்டுக்களுக்கு மத்தியில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,அவர்களது அடிப்படை தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கான தனியானதொரு செயலணியினை ஏற்படுத்தி மீள்குடியேந்நத்தை தடுத்து கொண்டுவரும் இனவாத சக்திகளுடன் போராடி மீள்குடியேற்றத்தினை முன்னெடுத்துவருபவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதில் வேறு எவர்களுக்கும் யெபர் போட முடியாது,அப்படி அதற்கு அவர்கள் உரிமை கோறுவார்கள் என்றால் அதற்கு வேறுபெயர்களை சூட்டுவது சலச் சிறந்தது.


வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கு உதவி செய்ய வக்கில்லாத வங்குரோத்து அரசியல் கட்சிகளின் பெயர் தாங்கிகள் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் அநியாயங்களை தொடர்ந்து செய்கின்றமை கவலையளிக்கின்றது.இன்றைய சவால்களும்,சதிகளும் நிறைநத காலத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது காணிகளை பெற்றுக்கொள்ள அவர்கள் படும் வேதனைகளை புரியாதவர்களாக அரசியல் கூஜா துாக்கிகளுக்கு மத்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகளை களங்கபபடுத்தும் செயற்பாடுகளே முதன்மை பெற்றுவருகின்றது.


இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் தேவையான கல்வி,போக்குவரத்து,சுகாதாரம்,விவசாயம் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை அடைந்து கொள்வதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வியூகம் வகுத்து செயற்படுவதை கண்ட அரசியல் வங்குரோத்து சக்திகள் அதனை காட்டிக்கொடுத்து அதன் மூலம் தற்காலிக சுகம் அனுபவிப்பதையும் இந்த வடபுல சமூகம் அறியாமல் இல்லை.


இந்த நிலையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிவில்லாத கொழும்பிலும்,ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சில காட்டிகொடுத்து சமூகத்தினை மலினப்படுத்தும் கை்ககூலிகள் இம்மக்களுக்கு செய்யும் துரோகத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையினை அரசாங்கத்திற்கும்,சர்வதேச அரங்கிற்கும் கொண்டு சென்று இந்த நாடுகளின் பார்வையினை இங்கு திரும்பச் செய்தும்,தொடராக வடபுல முஸ்லிம்களுக்கு இற்“றைக்கு வருடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இருக்கின்ற போது,அவரை மலினப்படுத்தி கால நேரத்தை இந்த சதிகாரர்களின் பக்கம் வீனடிக்க எடுக்கும் முயற்சி ஒரு போதும் பலிக்காது,புலிகளினால் விரட்டப்பட்ட ஒருவர்களில் தற்போது அமைச்சராக இருக்கின்ற றிசாத் பதியுதீன் அவர்களும் ஒருவர் என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அவரினால் முன்னெடுக்கப்படும் மீள்“குடியேற்ற செயற்பாட்டினை குறைத்து மதிப்பிடும் சக்திகள் முகமுடைந்து போவார்கள்.


தானும் உண்பதில்லை,பிறரையும் உண்பதற்கு இடம் கொடுப்பதுமில்லை என்ற மொழிக்கமைய வங்குரோத்து அரசியல் வாதிகளும்,அவர்களது அடிவருடிகளும்,கூலிகளும் இன்று வடபுல முஸ்லிம்களின் வருடத்தில் பொய்முகம் புகுத்தி மக்களது வாக்குகளுக்கு விலை பேசும் ஏஜெண்டுகளை நியமித்துள்ளதை காணமுடிகின்றது.


எது எப்படி இருந்தாலும் வட புல முஸ்லிம் அவர்களது தாயகத்தில் ஏனைய சமூகங்கள் எதனை அடைகின்றார்களோ அதனை போன்று அனுபவிக்கும் காலத்தினை நோக்கி நகரும் நல்ல திட்டத்தை முன்னெடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்ற மக்கள் சிந்தனை கொண்ட அரசியல் வாதிகளுடன் அனைவரும் கைகோர்த்து பயணிக்கின்ற போது இந்த மீள்குடியேற்றம் மிகவும் துரிதமாக இடம் பெறும் என்பது எதிர்வாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -