அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கியதாலேயே அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டமானின் பெயரை எடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மலையக மக்களுக்கு குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கு எனது அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
மலையகத்தின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் சூட்டப்பட்ட அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் எனது அமைச்சிக்கு வழங்கிய அமைச்சரவை அந்தஸ்த்து அடிப்படையில் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதே தவிர தொண்டமானின் பெயரை அங்கிருந்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
தொண்டமான் பவுன்டேஷன் ஊடாக வருடமொன்றுக்கு 20 கோடி ரூபாய் மோசடி செய்தவர்களெ இவ்வாறான கலவரங்களை மக்கள் மத்தியில் தூண்டி விடுகின்றனர். நான் அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு எனக்கு மூன்று நிறுவனங்கள் எமது அமைச்சின் கீழ் வந்தது.
இதில் பூல்பேங்கும் ஒன்றாகும். ஆகையால் தொண்டமான் பவுன்டேஷன் என்பது ஒரு குடும்பத்திற்குரியது அல்ல. தொண்டமான் பவுன்டேஷன் கீழ் இயங்கும் அட்டன் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான அமைச்சவை அந்தஸ்த்து எனது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற பின்பே இங்கு பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காக கொண்டு இவர்கள் மக்களை எனக்கு எதிராக தூண்டி விடுகின்றார்கள். எனக்கு பயம் காட்ட முடியாது. நான் துவங்கினால் இவர்கள் ஓட வேண்டும். மக்களுக்கு எமது சேவைகள் என்னவென்று விளங்கும். மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஆகையால் நாம் நல்ல விஷயங்களை செய்து வருகின்ற நிலையில் எமக்கு எதிராக மக்களை தூண்டி விடும் நிகழ்வுகள்ட நடந்தேறிகின்றது.
மலையகத்தில் புதிய வீடுகள் அமைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றோம். அதேபோன்று நுவரெலியா பிரதேச சபையில் விரிவகாக்கல் தொடர்பிலும் பாரிய அபிவிருத்திகளை மு்னனெடுத்து வருகின்றோம். இது இ.தொ.காவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதற்காக மக்களை தூண்டி விட்டு அவர்களை வீதிக்கு இறங்க வைத்து எமது எதிராக செயல்படுகின்றனர் என தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு செய்கின்ற சேவைகள் அடிப்படையில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.