எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய கல்விகல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கும் இடையில் சினேக பூர்வமான கிரிக்கட் மென்பந்து போட்டி (16) இன்று அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஆர். ராஜேந்திரன் , அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மட்டகளப்பு தேசிய கல்வியற் கல்லூரி 09 விக்கட்டுகளால் வெற்றியினை சுவிகரித்து கொண்டது.