எதற்காக ஹனீபா GS (மம்மலி) உடைய குழுவிடம் பள்ளிவாயல் நிருவாகத்தினை ஒப்படைக்க வேண்டும்.?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ல்குடா ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தெரிவு நாளை 28.10.2017 சனிக்கிழமை இடம் பெற இருக்கின்ற நிலையில் பிரதேசத்தில் முக்கிய புள்ளியாகவும், எலோருக்கும் பரீட்சயமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய புள்ளியுமான ஹனீபா GS என அழைக்கப்படும் மம்மளி விதானை தலைமையில் போட்டியிடுகின்ற 17 பேர் கொண்ட குழுவிடம் எதற்காக புதிய நம்பிக்கையாளர் சபையினை கையளிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையினதும், காணொளியினதும் சாராம்சமாகும்.

அந்த வகையிலே முன்னாள் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் நம்ப்பிக்கையாளர் சபை தலைவரான மம்மலி விதானை பிரதேசத்தில் சமகாலத்தில் இருக்கின்ற மிக முக்கிய கொடையாளியாகவும், இஸ்லாமிய இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக சிந்தனையுடன் பிரதேசத்தில் இருக்கின்ற பள்ளிவாயல்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பெருமளவு நன்கொடைகளை வழங்க கூடியவராக இருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டங்களோடு தனக்கிருக்கும் செல்வாக்கினை பயண்படுத்தி பிரதேசத்தில் இருக்கின்ற படித்த இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்கி வரக்கூடியவாரக காணப்படுவதோடு, கல்குடா பிரதேசத்தில் எல்லோராலும் மதிக்ககூடிய ஓர் சமூக சேவையாளனாகவும் தன்னை ஈடுபடுத்தி வருவது இவர் ஓட்டமாவடி பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினை பொறுப்பெடுப்பதற்கு மிகப் பொறுத்தமான தகமைகளாக பார்க்கப்படுகின்றது.

மேலும் இவருடைய சமூக சேவைகளையும், தனது சொந்த நிதியிலிருந்து சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒரு சில சேவைகளையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என நினைகின்றேன்.

அந்த வகையில்…

01- ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலைய காணிகொள்வனவிற்காக ஒரு இலட்சம் ரூபா(100000/=)

02- தியாவட்டவான் பாடசாலைக்கு ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் (120000/=)

03- ஓட்டமாவடி சரீஃப் அலி வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150000/=)

04- ஹுதா பள்ளிவாயல் கட்டி முடியும் வரை தேவையான மண்ணினை வழங்குதல். இது வரை ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான மண் வழங்கப்பட்டுள்ளது (600000/=)

05- செம்மண்ணோடை தக்வா பள்ளிவாயலுக்கு எம்பது ஆயிரம் (80000/= )பெறுமதியான மண்.

06- சிறாஜியா அரபு கல்லூரிக்கு இரண்டு இலட்சத்து நாற்பது ஆயிரம் மண் (240000/=)

07- மாவடிச்சேனை பள்ளிவாயலுக்கு ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான ஒளி பெறுக்கி சாதனம் sound system (150000/=)

08- மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் தீந்தை பூசுவதற்கு (25000/= )

09- மஜ்மா நகர் பள்ளிவாயலுக்கு ஐம்பது ஆயிரம் ரொக்கமும், ஐம்பத்து இரண்டாயிரம் பெறுதியான ஒளி பெறுக்கி சாதனமும். (50000+52000= 102000/=)

10- தாருள் உலூம் பாடசாலைக்கு முப்பத்தையாயிரம் 350000/=

11- தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவிற்கு ஒரு இலட்சத்திற்கு மேல் (100000/=)

12- பிரதேச செயலக சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு 75000/= பெறுமதியான பரிசில்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு நோயாளிகள், ஏழைகளினுடைய திருமண விடயங்கள், என நாளந்தம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை சமூகத்திற்கு செலவு செய்து கொண்டிருக்கும் ஹனீபா விதானையின் குழுவினரை எதிர் வருகின்ற ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கான நம்பிகையாளர் சபைக்கான தேர்தலில் வெற்றியடைய செய்து நம்பிக்கையாளர் சபையினை கையளிப்பார்களாயின் ஓட்டமாவடி பள்ளிவாயல் நம்பிக்கயாளர் சபையானது தேசியத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாக பேசப்படும் என்பதில் என்னிடம் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -