நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலை மற்றும் அதுதொடப்பான பல்வேறுபட்ட முன்னெடுப்புகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி(NFGG) விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் பொதுக் கூட்டங்களையும் தற்போது நடத்தி வருகின்றது.
அந்த வகையில் மற்றுமொரு பொதுக்கூட்டம்; இன்று (13.10.2017) காத்தான்குடியில் இடமபெறவுள்ளது.
காத்தான்குடி கடற்கரை வீதி தேசிய பாடசாலை முன்பாக இன்றிரவு 07.45 மணிக்கு இடம் பெறவுள்ள இக்கூட்டத்தில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர்அப்துர் ரஹ்மான். அதன் தேசிய அமைப்பாளர் அஸ்செய்க் பிர்தௌஸ் நழீமி ஆகியோர் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பிலும் சமூகப் பிரச்சினைகள்தொடர்பிலும் உரையாற்றவுள்ளனர்.
குறிப்பாக
காத்தான்குடியின் சமகால சமூகப் பிரச்சினைகள்: எவ்வாறு அணுகுவது..?
வடகிழக்கு இணைப்பு: ஏமாறப் போகிறோமா..? அல்லது ஏமாற்றி விட்டார்களா…?
தென்கிழக்கு அலகு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா..?
புதிய தேர்தல் சட்டமும், 50:50 முறையும்: பாதுகாப்பா..? பாதகமா..?
கொடுத்துவிட்ட 2/3 உம், கொடுக்கப்போகும் 2/3 உம்.: ஏமாற்றப்படுகின்றோமா..?
போன்ற பல முக்கிய தலைப்புகளில் இன்யைற உரைகள் இடம்பெறவுள்ளன.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அழைக்கின்றது.