ஆனால்,இந்த ஆட்சியில் ரவி புரிந்த ஊழலில் ஒரு வீதம்தானாம் மத்திய வங்கி ஊழல்.
இதை விடவும் பாரதூரமான ஊழல்கள் பற்றிய தகவல்கள் மஹிந்த அணியின் கைகளில் உள்ளதாம்.
ரவி அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்பதற்கு முற்படும்போது அந்த ஊழல்கள் வெளியே கொண்டு வரப்பட்டும் என்று மஹிந்த அணி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,1000 கோடி ரூபா பிராடோ வாகன வரி ஊழல் மற்றும் 650 கோடி ரூபா வாகன ஊழல் போன்ற பல ஊழல்களில் ரவி ஈடுபட்டிருந்தார் என்றும் விரைவில் அவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தால் எல்லாக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தப்பிடலாம் என்று நினைத்துத்தான் அந்த மனுஷன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
இருந்தாலும் மஹிந்தவின் ஆட்கள் ரவியை சும்மா விடமாட்டாங்க போலும்.
பாவம் ரவியைப் பிடித்துள்ள சனி இப்போது விட்டதுபோல
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்-