சாராயத்தில் கலப்படம்; கவலையில் எம்பி -[Political Gossip]

டக்கு-கிழக்கு மக்களின் மூன்று வேளை உணவாகவும் சாராயத்தைக் கொடுப்பதற்கு இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களிடையே குடிப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.அதற்கான ஆதாரம்தான் கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சாராயத் தொழில்சாலை.

இந்தத் தொழில்சாலையை நிறுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்தவோர் அரசியல்வாதியும் நடவடிக்கை எடுக்கவில்லை;அதற்காக கவலைப்படவில்லை.ஆனால்,அவர்கள் அருந்தும் சாராயத்தில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பில்தான் அவர்கள் கவலைகொள்கின்றனர்.

அண்மையில் இடம்பெற்ற சாராய விருந்துபசாரம் ஒன்றில் ஒரே பெயருடைய இரண்டு சாராய வகைகள் விநியோகிக்கப்பட்டனவாம்.ஒன்று நல்ல நிறமாகவும் நல்ல சுவையானதாகவும் இருந்ததாம்.மற்றையது மங்கிய நிறத்திலும் சுவை குறைந்தும் காணப்பட்டதாம்.

இந்த இரண்டாம் வகை சாராயம் எதனோல் கொண்டு தயாரிக்கப்பட்டதாம்.அதாவது கலப்படம் செய்யப்பட்ட-தரம் குறைந்த சாராயமாம்.இந்த மாபெரும் கண்டுபிடிப்பை மேற்கொண்டவர் ஓர் அரசியல்வாதியாம்.

அந்த அரசியல்வாதி உடன் சேர்ந்து சாராயம் அருந்திய இன்னோர் அரசியல்வாதியிடம் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டதும் அந்த அரசியல்வாதி மிகவும் கவலைப்பட்டாராம்.இவர்கள் எதற்காக கவலைப்படுகின்றார்கள் என்று பார்த்தீர்களா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -