க.கிஷாந்தன்-
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு 29.10.2017 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.
நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இக்குடும்பத்தினருக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஏற்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், வேலுகுமார், கே.கே.பியதாஸ, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.