சப்னி அஹமட்-
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய குடும்ப பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சரின் அதிக முயற்சியில் கஸ்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் வருடம் வருடம் மேற்கொள்ளப்பட்ட திட்டத்திற்கு அமைய இம்முறையும் முன்னாள் அமைச்சருக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 07 இலட்சத்திற்கும் அதிகமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கான வாழ்வாதார எரிவாயு சமயல் அடுப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டனதுடன், அதிதிகளாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ரீ. ஆப்தீன், கலீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. அதிசயராஜ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினர் யூ.எல். வாஹிட், முன்னாள் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ. நயீம் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மக்களுக்கான வாழ்வாதார உதவி பொருட்களை வழங்கி வைத்தனர்.