மேற்படி கலந்துரையாடல் அமையத்தின் தலைவரும், சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிபத்துல் கரீம் தலைமையில் இன்று சனிக்கிழமை(30 .09 .2017) மாலை 6.30 மணிக்கு மருதமுனை கமு/கமு/அல்-ஹம்றா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் SESEF அமைப்பின் அழைப்பிற்கிணங்க கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்;.ஏ.ஜலீல் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் மருதமுனையிலுள்ள பாடசாலைகளின், கல்வி அபிவிருத்தி தேவைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதில் மருதமுனையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர், பிரதிஅதிபர், பாடசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் ஆகியோருடன் மருதமுனையின் சா /தர கணித ,விஞ்சான ,ஆங்கில ,தமிழ் ,வரலாறு கட்பிகும் ஆசிரியர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத் மேலும் தெரிவித்தார்.