நவீன வளர்சிக்காலத்தில் சனத்தொகை பெருக்கத்திற்கேற்ப அவர்களின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு புதிய சபைகளை உருவாக்குதல் கட்டாயமானதாகும், என்பதனை உணர்ந்ததனால்தான் அமைச்சர் அதாஉல்லா பல புதிய சபைகளை உருவாக்கியதோடு, பல தசாப்பத காலமாக சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயில் இருந்து 20000 ரூபாய்களாக மாற்றினார்.
ஆனால் தனது காலடியில் அண்டை ஊர்மக்கள் சதா விழுந்து கிடக்கவேண்டும் என எண்ணிய ஹரீஸ் எம் பி அமைச்சர் அதாஉல்லா தங்கத்தட்டில் வைத்து தங்களது காலடிக்கு கொண்டுவந்த கல்முனை மாநகரசபை அத்தோடு சேந்து 3 நகரசபைகளையும் கபடமான முறையில் நாடகமாடி தடை செய்ததனை நீங்கள் அறிவீர்கள்.
விதியும், சதிசெய்த சூல்சிகளினாலும் அதாஉல்லா தேர்தலில் தோல்வியுற்றபோது முன் ஏற்பாடுகள் அனைத்தும் நின்றுபோனாலும், எமது மக்கள் பற்றிய இஹ்லாசான எண்ணம் எவ்வாறு இருந்தது என்பதனை சாய்ந்தமருது மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் நிகழும் இச்சந்தர்ப்பத்தில் எமது ஊர்வாத சண்டைகளை முன்னிறுத்தி மக்கள் எண்ணங்களை திசைதிருப்பி ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களினதும் அபிலாசைகளை பிரதமர் ரணில் குழிதோண்டி புதைத்து விடுவார்.
அதேநேரம் எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஊமையாக இருந்தாலும் தமிழ் தலைமைகளின் ஒப்புதல் இல்லாமல் சபைகள் பிரிப்பு என்பது சாத்தியமில்லை காரணம் அங்கே கல்முனை வடக்கு தமிழ் சபை ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.
எனவே அனைத்து மக்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கி ஏற்கனவே வரையப்பட்ட எல்லைகளைளில் திருத்தம் செய்யவேண்டுமானால் ஒற்றுமையோடு முன்மொழிந்து உரிய தரப்பிடம் ஒப்படைத்தால் இலகுவாக தீர்வினைப்பெற்றுக்கொள்ளலாம்.
இதன்பின் சபை உருவாக்கம், ஆளணி, அவர்களுக்கான சம்பளம் தொடர்பான அமைச்சரவை மற்றும் திறைசேரி அனுமதி, கட்டிடம், இயந்திரம் போன்றவைகள் திறமையான அமைச்சர் இருந்தால் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் இல்லாவிட்டால் நாம் போராடலாம்.