ஏறாவூர் எஎம் றிகாஸ்-
அதிவாசிகளின் பங்கேற்புடன் சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தையொட்டி முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட விசேட நிகழ்வு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 01.10.2017 நடைபெற்றது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன் ஆதிவாசிகள் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கும் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதாக பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏஆர்எம். றுசைத் தெரிவித்தார். கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பிரசன்னமாயிருந்த இந்நிகழ்வில் ஆதிவாசிகள் மிகுந்த அர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.