03 நாட்களாகியும் கடலில் மாயமான மாணவன் சஹாப்தீன் இன்சாப் கிடைக்கவில்லை! பெற்றோர்கள் பரிதவிப்பு:

காரைதீவு நிருபர் சக-

சாய்ந்தமருதுக்கடலில் நேற்றுமுன்தினம் (11) சனிக்கிழமை குளிக்கச்சென்று கடலில்மூழ்கியசமயம் காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப் (வயது 17) 03 நாட்களாகியும் இன்னும் கிடைக்கவில்லையென பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்சாப்பின் வீடு மரணவீடாக காட்சியளிக்கிறது.கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர். மகன் உயிரேடு இருக்கிறாரா மரணித்துவிட்டாரா என்று தெரியாமல் தினம் தினம் உருகிக்கொண்டிருக்கிறார்கள். 

உற்றார்சுற்றத்தவர்கள் சென்று வருகின்றார்கள்.
மகனைக்காணாது பெற்றோhர்களும் உறவினர்களும் பரிதவிக்கின்றனர்.
நேற்றும் திருமலையிலிருந்து கடற்படையினர் தேடுதல் நடாத்தியபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையனெ தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் பகல் ஆறு மாணவர்கள் சாய்ந்தமருது பீச்பார்க் (சீபிறிஸ் கோட்டல் முன்னாலுள்ள கடல்) அருகிலுள்ள கடலில் குளிக்கச்சென்றிருந்தசமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காப்பாற்றப்பட்ட அறுவரில் இருவரின் நிலை மோசமாகப்போகவே இருவரையும் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருவரையும் அவசரசிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரு மாணவன் சிலமணிநேரத்தில் வெளியேறினார். மற்ற மாணவன் இன்னும் அதிதிவீரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
மற்ற மாணவனான அல்தாப் தற்போது பேசக்கூடிய நிலையிலுள்ளார். தீவிரசிகிச்சைப்பிhவிலிருந்து அவர் சாதாரண விடுதிக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

இன்சாப்பின் குடும்பத்தவரால் கல்முனைப்பொலிசார் மற்றும் கடற்படைக்கு நேற்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடும்ப அங்கத்தவர் சம்சுதீன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (12) சனிக்கிழமை படகில் சென்று தேடுதல் வேட்டையிலீடுபட்டனராயினும் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -