க.கிஷாந்தன், மு.இராமச்சந்தின்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் 07.11.2017 நேற்றிரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட லொறி விபத்தில் அதில் பணயஞ் செய்த 11 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இவ்விபத்து லொறியில் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் காயமடைந்த சாரதி தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் அனைவரும் ஆண்கள் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.