ஓட்டமாவடி பிரதேச சபையினை 1994ம் ஆண்டினைப்போல் ஐக்கிய தேசிய கட்சி இம்முறை கைப்பற்றுமா.?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ட்டமாவடி பிரதேச சபையினை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 1994ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் தலைமையில் போட்டியிட்ட அணியானது அமோக வெற்றியடைந்து ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றியிருந்தது.

அதற்கு பிற்பாடு பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் போட்டியிட்ட அணியியே 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான ஆட்சியினை தன் வசப்படுத்திக்கொண்டது.

ஆனால் தற்பொழுது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடனான நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் முன்னெடுப்பின் அடிப்படையிலும், ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயின் புதிய நிருவாகத்தின் இணைத் தலைவர் ஹனீபா (மம்மளி ஜீ.எஸ்) ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் பேனிவருகின்ற தொடர்ந் தேர்ச்சியான நட்பின் அடிப்படையிலும், தொடர்ந்து வந்த பல உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் வெற்றியடைந்து உறுப்பினராக இருந்து வருகின்ற எல்.ரி.எம்.புர்கானின் அரசியல் முன்னெடுப்புக்கள் காரணமாகவும், ஓட்டமாவடி மக்களினுடைய தற்போதைய மனோ நிலை காரணமாகவும் இம்முறை ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்காகன அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவே தென்படுகின்றது.

அத்தோடு தனது சதுரியத்துடனும், நுட்பத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அமைப்புடன் சேர்ந்து தொழில் வாய்ப்பு, இன்னபிற அரசியல் செயற்பாடுகளை ஓட்டமாவடி பிரதேசத்தில் பரவலாக மேற்கொண்டு வரும் கல்குடா தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளர் சபீர் மெளலவிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற நன்மதிப்பும், அரசியல் ரீதியான அவருடைய காய் நகர்த்தல்களும் ஐக்கிய தேசிய கட்சியானது ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றுவதற்கு பெரும் பங்கினை வகிக்க கூடியதாக காணப்படுகின்றது.

அதையும் தாண்டி முக்கியமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை மர சின்னத்தின் தனித்து போட்டியிடப் போகின்றது என பேசப்படுகின்ற விடயத்தினை வைத்தும், மறு பக்கத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்குவார்களாயின் எந்த வித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லாமல் ஓட்டமாவடி பிரதேச சபையினை 1994ம் ஆண்டுக்கு பிற்பாடு ஐக்கிய தேசிய கைப்பற்றும் என்பதே எலோருடைய பார்வையாகவும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -