மூதூர் ஆதில்-
கலாச்சார அலுவல்கல் திணைக்களத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்படும் பிரதேச, தேசிய மட்டத்திலான இலக்கிய கலைப் பெருவிழாவின் பொருட்டு மூதுர் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலை மட்டம், திறந்த மட்டம் நடாத்தி முடிக்கப் பட்ட இலக்கிய போட்டி நிகழச்சிகளில் முதல் மூண்று இடங்களைப் பெற்று வெற்றியீட்டியோருக்கான பரிசீல்களும் சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் கடந்த 2017/10/31 ம் திகதி செவ்வாய் கிழமை பி.ப 2 மணிக்கு பிரதேச செயலக ஒண்றுகூடல் மண்டபதில் மிக சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழவில் பிரதேச செயலகத்தின் செயலாளர்……..மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்களும் மூதூர் பிரதேச இலக்கிய வாதிகளும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.