தோல்விக்குப் பயந்து உருவாக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம். 25% பெண் பிரதிநிதித்துவம் சாத்தியமா? எஸ். ஜவாஹிர்சாலி…

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ரு நாட்டில் தேர்தல் திருத்தச் சட்டங்கள் இடம்பெற்றால் அங்கே பொருத்தமோ இல்லையோ சரியாக இருக்க வேண்டும்.

1978ம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் மூலம் உருவாக்கப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையானது நாட்டுக்குப் பொருத்தமோ இல்லையோ சரியான முறையில் அது தயாரிக்கப்பட்டிருந்தது. சரியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் பொருத்தமற்ற சில விடயங்கள் (உதாரணமாக பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வெட்டுப்புள்ளி 12 ½ம% விகிதத்திலிருந்து 5மூ ஆக மாற்றப்படல்) மாற்றப்பட்டன.

இதன்படி நடைபெறப்போவதாகக் கூறப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் கூறப்படட சில கட்டுப்பாடுகள் சாத்தியமா என்பதை ஒரு விடயத்தில் மாத்திரம் ஆராய்ந்து பார்ப்போம்.

புதிய உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விதிகளின்படி ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்கும் உறுப்பினர்கள் வட்டாரங்களை 60% ஆகக்கொண்டு விகிதாசாரத்தில் 40மூ உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவர்.

ஒரு கட்சியோ, சுயேச்சைக் குழுவோ வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வட்டாரத்திற்காக குறைந்தது 10% பெண் வேட்பாளர்களையும் பட்டியலில் 50மூ பெண் வேட்பாளர்களையும் உட்புகுத்த வேண்டும்.

வட்டாரம் தவிர்த்து விகிதாசாரத்தில் உறுப்பினர்களை நியமிக்கையில் எத்தனை பெண் உறுப்பினர்களை வெற்றியாளர்களாக நியமிக்க வேண்டும் என, தேர்தல் இறுதி முடிவின் போது தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பார். இதன்படி பெண் உறுப்பினர்கள் 25% ஆனவர்கள் இடம்பெறக் கூடியதாக கட்சிகளுக்கும், சுயேச்கைக் குழுக்களுக்கும் அவர் நியமிக்க வேண்டிய எண்ணிக்கையைத் தெரிவிப்பார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் ஏறாவூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் மேலதிக தேர்தல் ஆணையாளர் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளார்.


ஏறாவூர் நகர சபைக்குரிய வட்டாரங்கள் = 10

விகிதாசாரத்தில் வருபவர்கள் = 6

மொத்தம் = 16


இவர்கள் 25% ஆக 4 பெண்கள் உறுப்பினராவர்.


இது சாத்தியமா என்பதை பின்வரும் உதாரணம் மூலம் பார்ப்போம்.

⇒ இதே போன்ற ஒரு சபையை எடுத்துக்கொள்வோம்.

இங்கு ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் வேட்புமனு கட்டாயம் பின்வருமாறு இருக்கவேண்டும்.

10 வட்டாரங்கள் என்பதால் இதில் ஒருவராவது பெண்ணாக இருக்க வேண்டும்.

பட்டியலில் 6+3=9 பேர் இடம்பெற வேண்டும். இவர்களில் குறைந்தது 4 பெண்கள் இருக்க வேண்டும்.

இங்கு A,B,C,D,E,F,G,H என பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன எனக் கொள்வோம்.

தேர்தல் முடிவின்படி ஒவ்வொரு கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்ற வாக்குகளின் படி அவர்களுக்கு கிடைத்த உறுப்பினர்கள் பின்வருமாறு அமையலாம்.

குழு A யிற்கு = 3 உறுப்பினர்கள்

குழு B யிற்கு = 1 உறுப்பினர்

குழுC யிற்கு = உறுப்பினரில்லை

குழு D யிற்கு = 2 உறுப்பினர்கள்

குழு E யிற்கு = 5 உறுப்பினர்கள்

குழு F யிற்கு = 3 உறுப்பினர்கள்

குழு G யிற்கு = 2 உறுப்பினர்கள்

குழு H யிற்கு = உறுப்பினரில்லை


இங்கு கட்சிகள் வெற்றிபெற்ற வட்டாரங்களும் பெற்ற சதவீத வாக்குகளும், விகிதாசாரத்தில் வரவேண்டிய உறுப்பினர்களும் அட்டவணையில் உள்ளனர்.

குழு பெற்ற சதவீத வாக்குகள் வெற்றிபெற்ற வட்டாரங்கள் விகிதாசாரத்தில் கிடைக்கவேண்டிய உறுப்பினர்கள்

A 16% 2 1

B 5% -- 1

C 1% -- --

D 12% 1 1

E 34% 4 1

F 18.5% 3 --

G 11% -- 2

H 2.5% -- --

மொத்தம் 10 06

இங்கு வட்டார ரீதியில் வெற்றிபெற்ற அனைவரும் ஆண்கள் எனின், இதன்படி “E” என்ற குழவிற்குரிய விகிதாசாரத்தில் வரும் ஒரு உறுப்பினரை மாத்திரமே பெண்ணாக நியமிக்க முடியும். ஏனெனில் ஏற்கனவே திருத்தச் சட்டத்தில் “ கட்சி அல்லது சுயேச்சைக் குழு 20ம% அல்லது 3 உறுப்பினர்களுக்கு அதிகமாக எடுத்தால் மாத்திரமே பெண் உறுப்பினரை நியமிக்க நிரப்;பந்திக்க முடியும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கு A,B,D,G ஆகிய குழுக்கள் விரும்பினால் மாத்திரமே பெண் உறுப்பினர்களை நியமிக்கும். ஆனால் கட்டாயப்படுத்த முடியாது. எனவே அவர்கள் நியமிப்பது ஆண் உறுப்பினர்கள் எனின், இச்சபையில் 15 ஆண்களும் ஒரு பெண்ணுமே உறுப்பினர்களாக இருப்பர்.

சில சந்தர்ப்பங்களில் எல்லா உறுப்பினர்களும் ஆண்களாகவும் வரக்கூடும். எனவே சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல 25ம% பெண் உறுப்பினர்கள் ஆக இருப்பர் என்பது எப்போதும் சாத்தியமான ஒன்றல்ல. எனவே பல கட்சிகள் சம பலத்துடன் போடடியிடும் இடங்களில் 25% பெண் உறுப்பினர் தெரிவாக வேண்டும் என்பது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு. 2 அல்லது 3 கட்சிகள் சம பலத்துடன் அல்லது ஒரு கட்சி ழுமுப் பலத்துடன் போட்டியிடும் இடங்களில் மாத்திரமே இது சாத்தியம் என்பதை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சோ, தேர்தல் ஆணைக் குழுவோ இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமான விடயம்.

பெண்கள் உறுப்புரிமை 25ம% அக இருக்க வேண்டுமென்றால் பின்வருமாறு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

20% வாக்குகளுக்கு மேல் அல்லது 3 உறுப்பினர்களுக்கு மேல் பெற்றால் மாத்திரமே பெண் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளர் கூறும் வகையில் நியமிக்கப்பட வேண்டும் என்ற வாசகம் நீக்கப்பட்டு,

“ தேர்தல் ஆணையாளர் விகிதாசாரத்தில் கிடைக்கும் உறுப்பினர்களிலிருந்து எவ்வெவ் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் எத்தனை பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டுமென்று தெரிவிப்பார்” என மாற்றப்பட வேண்டும்.

மேலும் மிகக் குறைந்த வாக்களிப்பு நடைபெறும் இரு வட்டாரங்களில் வெற்றிபெறும் ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகளையே பெறுகின்றது என்ற நிலையில் வேறு ஒருகட்சிக்கு கொடுக்கப்படவேண்டிய உறுப்புரிமை குறைவடையும் நிலை ஏற்படும். இதற்கு என்ன பரிகாரம் என்பது கூட திருத்தச் சட்டத்திலே கூறப்படவில்லை.

இதற்காக, குறித்த சதவீத வாக்களிப்பு நடைபெறாத இடங்களில் மீள்தேர்தல் நடைபெற வேண்டும் என்ற திருத்தம் இடம்பெற வேண்டும்.

எனவே உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டத்திலே இவ்விடயம் உடனடியாக திருத்தப்பட்டே சபைகளுக்குரிய உறுப்பினர் எண்ணிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். தேர்தலைப் பிற்படுத்தவதற்காக அவசர அவசரமாக அடிக்கடி திருத்தங்களை கொண்டுவரும் போது இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பயன்படுத்த அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் முயல வேண்டும்.

எது எப்படியோ, இவை யாவும் தேர்தலை பிற்படுத்துவதற்காக, விளைவுகளைச் சிந்திக்காமல் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட சட்டங்களே, இதன்படி தேர்தல் மேலும் சில மாதங்கள் பிற்போடப்படலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -