சாமிமலை கொழும்புத் தோட்டத்திற்கு 3 கோடி நிதியில் பாலம் - மக்கள் பாவனைக்கு

 


மு.இராமச்சந்திரன் -


க்கள் சந்திப்பு என்னும் பெயரில் காற்சட்டை பைகளுக்குள் கைகளை விடடுக்கொண்டு மக்கள் முன் நின்று நாம் கதை கேட்டுக்கொண்டு இருக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாத்திரமின்றி துறைசார் அமைச்சுக்களிடமும் ஜனாதிபதியின் திட்டங்களில் இருந்தும் நிதியினைப்பெற்று மேற்கொண்டு அபிவிருத்தி செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். சில அபிவிருத்திப்பணிகள் தாமதமானாலும் அதனை நிறைவேற்றுவதில் நாம் பின்னிற்கபோவிதில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

சாமிமலை (ஸ்காபரோ) கொழும்புத் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மிகமோசமாக பழுதடைந்திருந்த பாலத்தினை ஜனாதிபதியின் ஆயிரம் பாலங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 3 கோடி நிதியினைப்பெற்று புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் பொதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
ஞாயிறு மாலை சாமிலை கொழும்புத் தோட்ட முன்றலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாககாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு வருடத்திற்கு ஒருகோடி ரூபா நிதியே பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படுகின்றது. 

இருந்தும் துறைசார் அமைச்சுக்களிடம் இருந்தும் ஜனாதிபதியின் திட்டங்களில் இருந்தும் நிதியினைப்பெற்று நாங்கள் அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறித்த பாலம் பலவருட காலமாக மிகவும் மோசமாக பழுதடைந்திருந்தது. சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பதாக இரவ பத்து மணியளவில் இந்த பாலத்தினைப்பார்க்க இந்த பிரதேச இளைஞர்கள் என்னை அழைத்து வந்தார்கள். அப்போது வீழந்துகிடந்த பாலத்தின் மீது ஆறு ஓடிக்கொண்டிருந்தது. வாகனங்கள் அதன் மீதே பயணித்துக்கொண்டிருந்தன. இதனை அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்க கொண்டு சென்று அவரின் ஆயிரம் பாலங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித திட்டத்தின்p கீழ் இன்று அபவிருத்தி செய்துள்ளேன். 

அதற்காக ஜனாதிபதிக்கும் நிதியினை ஒதுக்கீடு செய்த உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்புட்டுள்ளேன். இந்த பாலம் அமையவிருப்பதை கேள்விப்பட்டு சிலர் அதற்கு உரிமை கோர முயற்சித்தார்கள். அவர்களை இந்தப்பகுதிக்கு வரமுடியாதவாறு இளைஞர்கள் விரட்டி அடித்தார்கள். 

கைகளைக் காற்சட்டைபைகளு;கள் விட்டுக்கொண்டோ, வயிற்றின் மீது கட்டிகொண்டோ மக்கள் சந்திப்பு எனும் பெயரில் நாம் மக்களிடத்தில் வருவதில்லை. ஏதேனும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் முன் கொண்டு செல்கின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் சாமிமலைப்பகுதிக்கு அதிகளவு நிதி ஒதுக்குPடு செய்த மக்கள் பிரதிநிதி திலகர் என்பதை பிரதேச மக்கள் அறிவார்கள். 

எனது முயற்சியில் இன்னும் தாமதமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பது மின்னா தோட்டத்திற்கான பாதை மாத்திரமே. பெருந்தெருக்கள் அமைச்சில் நான் விடுத்த வேண்டுகோளில் கிடைக்கப்பெற்ற அந்த வீதி மகநெகும திணைக்களத்தில் இருந்து தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றம் பெற்றுள்ளது. விரைவில் கேள்விப்பத்திரம் கோரப்ட்டு பாதை மறுசீரமைக்கப்படும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட மூலப்பொருட்கள் கவுரவில மைதானத்துக்கு முன்பதாக குவித்து வைக்கப்ட்ட்ளளன. விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும். 

இந்த பாலத்தினைப் போல அதனையம் மக்களிடம் கையளிக்க நான் வருவேன். பாலத்தின் அபிவிருத்தியினை தமக்கு சொந்தமாக்க முயற்சித்த கையாலாகாதவர்கள் மின்னா பாதையைக் காரணம் காட்டி எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய திட்மிட்டுள்ளதாக அறியகிடைத்தது. 

இந்தப்பாலத்தினையும் எமது பணிகளையம் எவரும் மழுங்கடிக்க முடியாது. விரையில் மின்னா பாதை மறுசீரமைக்கப்படும் அதுவரை பொறுமை காக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கினறேன் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -