அவர் மேலும் தெரிவிக்கையில்...
எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைதடுத்து நிறுத்தும் முயற்சிகளை இலங்கை மக்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால்எமது நாட்டை முழுமையாக விற்று காசாக்கி விடுவார்கள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க மாட்டோம் என்றார்கள். தற்போதுவெளிநாட்டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மத்தளை விமான நிலையத்தையும் யாருக்கும்வழங்கமாட்டோம் என கூறப்படுகின்ற போதும் இவர்களின் பேச்சை நம்ப முடியாது. எமதுநாட்டின் வளங்களை பாதுகாக்க நாம் ஒன்றாக வேண்டும்.
எமது நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் சிறை சென்று திரும்பியுள்ளேன். என் உயிரைகொடுக்கவும் தயாராகவுள்ளேன். நாங்கள் முன்னின்று மாத்திரம் போராட்டம்நடாத்துவதால் எதுவும் ஆகிவிடாது. தங்கள் நாட்டை பாதுகாக்க இலங்கை மக்கள்ஒன்றுபட வேண்டும்.