தொப்பி போட்ட ஆளு யாரும்
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
சட்டத்திடம் ஒப்படைச்சு
பட்ட குறை நீக்கலாமே
சிந்தையிலே இனப் பற்றில்
சந்தையிலே சண்டை செய்வோர்
கந்தையான உடுப்புடுக்கும்
கந்தையாக்கு உதவலாமே
பிரான்ஸிலே பிஸ்ஸா திண்டு
கிராண்ஸ்லே உசுப்பேத்தும்
போராளிக்குப் புரியாது
கீரை விற்கும் ஆளின் கஷ்டம்
காசு பணம் உழைக்க என்று
மேசன், கூலி வேலை செய்வோர்
மோசமாகப் படும் பாடு
பேச இங்கு யாருமில்லை
யுத்தத்தாலே பட்டபாடு
மொத்தமாக மறந்து போச்சா
குத்திக் காட்ட சொல்லவில்லை
புத்தியாக நடந்து கொள்வோம்
தூண்டி விட்டு லாபந்தேடும்
ஆண்டிகளின் அரசியலால்
மாண்டு இங்கு சிதைந்து போகும்
ஆண்டுகால ஒற்றுமைகள்
சாதிகளின் பெயர் சொல்லி
மோதி இங்கு கண்ட லாபம்
ஏதும் உண்டா சொல்லுங்கப்பா
போதும் இந்த மோதும் வெறி