பறிக்கப்பட்ட உரிமைகளை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம்






க.கிஷாந்தன்-

ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா லெமன்மோரா தோட்ட தொழிலாளர்கள் 06.11.2017 அன்று அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டஉரிமைகளை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

28 தொழிலாளர் குடும்பங்களில் 80 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு இந்த தோட்டத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற தொழிலாளர் உரிமைகள்மறுக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்து இந்த போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்தனர்.

எமது தோட்டம் தனியார் தோட்டம் என்பதால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பிய வண்ணம் போராட்டத்தைமுன்னெடுத்துள்ள லெமன்மோரா தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் பெரிதாக பாதிக்கப்பட்டுபின்தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதார வசதி, வீட்டு வசதி, குடிநீர் பிரச்சினை, வீதி என முக்கிய அடிப்படை பிரச்சினைகள் இவர்களுக்கு பல வருட காலமாக செய்துகொடுக்காமல் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்க்கையை கொண்டு செல்வதாக போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

இந்த நாட்டில் வாக்குரிமை பெற்ற தோட்ட தொழிலாளர்களில் நாங்களும் வாக்குகளை அளிக்கும் உரிமையுடைவர்களாக காண்கின்றோம்.இருந்தும் எமது உரிமைகளுக்கு தீர்வுகளை பெற்று தராது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் எம்மை வேறுப்படுத்தியேபார்க்கின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு மட்டத்தில் கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள, தொழிற்சங்கவாதிகள் எனதெரிவிக்கப்பட்டும் எமக்கு எந்த தீர்வும் கிடைக்காத பட்சத்தில் எமது நிலைமையை வெளிக்கொண்டு வரவே இந்த ஆர்ப்பாட்டத்தைமுன்னெடுக்கின்றோம்.

எனவே இப்போராட்டத்தின் ஊடாக நாமும் மலையக தொழிலாளர்களின் ஒரு பகுதியினரே என்பதை ஊடகங்கள் ஊடாவது தெரிந்து கொண்டுஎமது நிலைமையை ஆராய்ந்து பார்க்கும்படியும் எமது பிரச்சினைகளை தீர்க்கும்படியும் இவர்கள் வழியுறுத்திக் கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -