மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் தொடர்கின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் 04.11.2017 அன்றுமதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 8 பேர் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.
நீர்க்கொழும்பு நாத்தாண்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா மேற்கொண்டு, வெள்ளிக்கிழைமை 03.11.2017 அன்று மாத்தளைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் எட்டு பேரே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 04.11.2017 அன்று மாலை ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறுமியின் சடலம் 05.11.2017 காலை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் மேற்படி சிறுமியின் சடலம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் மழை காரணமாக, மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில், விசேட அதிரடிப்படை, கடற்படையின் சுழியோடி பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகினறனர்.
நக்கில்ஸ் மலைத் தொடரில் பெய்துவரும் அதிக மலையுடன் ஆற்றின் நிர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள்
கிங்சிலி ரத்நாயக்க (வயது – 40)
சந்திராகாந்தி (வயது - 59)
வினுக்கி ரத்நாயக்க (வயது – 13)
ஹிருனி ரத்நாயக்க (வயது - 4)
ரவிந்திர லசந்த (வயது – 39)
ருவனி டில்ருக்ஷி (வயது – 38)
ரிஷாதி வீகிஷா (வயது - 12)
சந்துனி (வயது – 12)