பரீட் இஸ்பான்-
மீலாத்தின தேசியமட்டப் போட்டிகள் கடந்தவாரம் கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் வவுனியா சின்னச்சிப்பிக்குளம், தாருல் உலூம் முஸ்லிம் வித்தியால மாணவி அஸ்வர்தீன் பாத்திமா நுஹா தேசிய மீலாத் தின கனிஷ்டப் பிரிவு பேச்சு (தமிழ்) போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வலயம், மாகாண மட்டங்களில் முதலாமிடத்தைப் பெற்று தேசியத்திலும் சாதனை படைத்த அஸ்வர்தீன் பாத்திமா நுஹா சென்ற ஆண்டும் தேசிய மட்டப் போட்டிகளில் தடம் பதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையிலிருந்து நிசார் றுசாத் மற்றும் ஜெமீன் ஹம்தா ஆகியோரும் வலயம், மாகாணத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டம் வரை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயம்.
இவர்களின் வெற்றிக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின் வழிகாட்டலும் ஊக்கவிப்புமே காரணம் எனலாம்.
அஸ்வர்தீன் பாத்திமா நுஹாவை நாமும் வாழ்த்துகின்றோம்.