எமது பிள்ளைகள் மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.







எம்.ரீ. ஹைதர் அலி-

மது சமூகத்தினைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தூரம் நாங்கள் அரசியலிலும், பணத்திலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் அவைகள் அனைத்தும் எமக்கு எப்போதும் நிரந்தமில்லாதவை என்பதனை நாங்கள் நன்றாக புரிந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை றோஸ் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தளபாடங்கள் 2017.10.30ஆந்திகதி - திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.


செம்மண்ணோடை றோஸ் பாலர் பாடசாலையின் ஆசிரியர்களிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தளபாடங்களை கையளித்தார்.

செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜனாப். கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீதமான முஸ்லிம் சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இப்பொழுது எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அதிகாரமென்பது எமது வீகிதாசாரத்தினை விட உயர்ந்தளவில் காணப்படுகின்றது.


இப்போதுள்ள சூழ்நிலையில் மாவட்டத்தில் எமது சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எமது மாவட்ட வரலாற்றிலே மூன்று பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் இருப்பது இதுவே முதற்தடவையாகும். எதிர்காலத்திலும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும் என்பதனை யாரும் ஊறுதியோடு கூறமுடியாது.

எமது சமூகத்தினுடைய உரிமைகளையும், அபிலாசைகளையும் எவ்வாறு நாம் எதிர்காலத்தில் வென்றெடுக்கப் போகின்றோம் என்கின்றதொரு விடயத்திற்கு எமது பிள்ளைகளினுடைய கல்வி வளர்ச்சியினை மாத்திரம்தான் நாம் நம்பியிருக்கின்ற ஒரு தேவைப்பாடு இருக்கின்றது.

எமது பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து சமூகம் மதிக்கத்தக்க வகையில் நம்நாட்டிற்கு சிறந்ததொரு பிரஜையாக வரவேண்டும். அவ்வாறு நம்பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டியதொரு தேவைப்பாடு பெற்றோர்களாகிய அனைவருக்கும் இருக்கின்றது. அதிலும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருக்கின்றது. பெண்கள்தான் எந்நேரமும் தனது பிள்ளையின் செயற்பாட்டினை அவதானிக்க கூடியவர்களாகவும், வீட்டில் கூடுதலான நேரங்களை செலவிடுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அதிலும். எமது பிள்ளைகளை வளர்த்தெடுக்கின்ற விடயத்தில் அவர்களை எமது மார்க்க ரீதியாக பண்படுத்தப்படாமல் இருப்போமேயானால் எதிர்காலத்தில் அப்பிள்ளை பாரிய பிரச்சினைகளை சமூகத்தின் மத்தியில் உள்வாங்குகின்ற பிள்ளையாக மாற்றமடையும். ஆரம்பத்திலிருந்து எமது பிள்ளைகளை மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக நாம் வளர்த்தெடுப்போமேயானால் கல்வியில் உயர்ந்த பிள்ளையாக வரும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற போதைப்பொருள் பாவனையினை ஒழிப்பது சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்றின்போது எமது மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை என்பது முஸ்லிம் பிரதேசங்களில்தான் அதிகமாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்வாறான பாலர் பாடசாலை பருவத்திலிருந்தே எமது பிள்ளைகளை எமது மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக வளர்த்துடுக்க வேண்டும், அதற்குரிய சூழலாக இவ்வாறான பாலர் பாடசாலைகள் திகல வேண்டும் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -