வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் பற்றி வன்னி பெண்களுக்கு -ஜான்சிராணி விடுத்துள்ள பகிரங்க அறிக்கை

தேசிய காங்கிரஸ் மூலமாக வன்னி அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் முன்வர வேண்டும் என்று இக்கட்சியின் வட மாகாணஅமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையிலும், இத்தேர்தல் மூலம் தெரிவாகின்ற மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதமானோர் பெண்உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைமையிலும் வன்னி பெண்களுக்கு இவர் விடுத்து உள்ள பகிரங்க அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையைஇவர் முன்வைத்து உள்ளார்.

இவ்வறிக்கையில் இவர் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

சமூகத்தை பற்றிய சிந்தனையும், பிரக்ஞையும் ஆண்களுக்கு மாத்திரம் அல்ல பெண்களுக்கும் இருக்கின்றது. சமூகம் பற்றிய பிரக்ஜையும், சிந்தனையும் எனக்கு அதிகமாக இருப்பதன் காரணமாகவே தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளர் பதவி, மகளிர் பொறுப்பாளர் பதவி ஆகியவற்றை ஏற்று கொண்டு நான் அரசியலில் மீள்பிரவேசம் செய்து உள்ளேன்.

வன்னி அரசியல் தலைமையால் மிக நீண்ட காலமாக எமது மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்ற சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்பார்த்து காத்து உள்ளனர். இம்மாற்றத்துக்கான திறவுகோலாக வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் அமைய பெறும் என்பது எனது திடமான நம்பிக்கை ஆகும்.

இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பெண்களும் முக்கியமான பங்காளிகளாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தேசிய காங்கிரஸ் வழங்குகின்றது. பெண் என்பவள் சமைக்கவும், பிள்ளை பெற்று கொடுக்கவும் பிறந்தவள் மாத்திரம் அல்லள், சாதிக்கவும் பிறந்தவள் என்பதை இந்த வரலாற்று சந்தர்ப்பம் மூலமாக நிரூபித்து காட்ட எல்லோரும் ஓரணி திரண்டு வர வேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -