காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் யசீர்ஹமீட் தலைமையிலான பட்டதாரிகள் குழுவினர் இன்று (1) புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவைச் சந்திக்கவுள்ளனர்.
இதற்கென இன்று காலை அக்கரைப்பற்றிலிருந்து புறப்படும் பஸ்ஸில் செல்லவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இவர்கள் நேற்றுமுன்தினம் கல்முனையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்காரியலாயத்தில் முறைப்பாடொன்றைக் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருமலை மாவட்ட பட்டதாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை திருமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தின்முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் ஆளுநரிடம் மகஜரைச் சமர்ப்பித்துச் சென்றனர்.
கிழக்கு பட்டதாரிகளை ஆசிரியர்சேவைக்குள் உள்ளீர்க்க அண்மையில் நடாத்தப்பட்ட திறந்த போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் பிரயோகப்பரீட்சைக்காக வெளியிடப்பட்ட முடிவுகளில் பல அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. எனவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனக்கூறி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி மீண்டும் தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் 4927 ஆசிரியர் வெற்றுடங்கள் காணப்படுகின்றது என கல்விப் பணிப்பாளர் அறிக்கை விட்ட நிலையில் 1446 வெற்றிடங்களை நிரப்ப மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. எனவே மீதமுள்ள 3481 வெற்றிடங்களுக்குள் சராசரியாக 40 புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள ஆளுநர் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாகும்.
அம்பாறை மாவட்ட தலைவர் யசீர் ஹமீட் கூறுகையில்:
அம்பாறை மாவட்டத்திலிருந்து 3009 பட்டதாரிகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 1296பேர் சித்தியடைந்துள்ளனர். ஆனால் நேர்முகப்பரீட்சைக்காக 331பட்டதாரிகளை மாத்திரமே அழைத்துள்ளனர். அதாவது 1744பேர் சித்தியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுளனர்.
சித்தியடைந்த 1265 பேரை எடுத்துக்கொண்டால் 1990 க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 674பேர் சித்திபெற்றுள்ளனர்.இது 53.3வீதம் ஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த 591பேர் சித்திபெற்றுள்ளனர்.ஆகும். இது 46.7வீதமாகும். அதாவது பழைய பட்டதாரிகள் குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும் சித்திபெற்றுள்ளனர். அது சகஜமே.
இதேபோல் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 331 பேரை எடுத்துக்கொண்டால் 1990 க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 195பேர் .இது 49வீதம் ஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த 136பேர் சித்திபெற்றுள்ளனர்.ஆகும். இது 41வீதமாகும்.
அதாவது பழைய பட்டதாரிகள் குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும் சித்திபெற்றுள்ளனர். அது சகஜமே.அதற்கக நாம் போராட்டத்தில் ஈடுபட்ட பழைய பட்டதாரிகள் இரையாகமுடியாது.
எமது சந்திப்பு பலனளிக்காவிடில் நாம் மீண்டும் சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். என்றார்.