மாளிகாவத்தையில் உள்ள அலெக்ஸர் சர்வதேச கல்லூரியின் 2017ற்காண பரிசளிப்பு வைபவம் அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதனையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜப்டீன், கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ராபி, அதிபர் ராசீக் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர். மாணவ மாணவிகளது பேச்சு , கலை நாடக நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளையும் படத்தில் காணலாம்.