வெற்றி தோல்விகளை சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வீரர்களிடம் உருவாக வேண்டும்- நஸீர்





சப்னி அஹமட்-

”விளையாட்டுத்துறையில் வெற்றி தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்றப்பால் நமது மனநிலைகளை மாற்றிக்கொள்ளும் தன்மைகளை நமது பிரதேச விளையாட்டு வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என வீரர்களிடம் கோருகின்றேன்”. என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் வேண்டிக்கொண்டார்.

அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக அமைப்பின் (ADS) ஏற்பாட்டில் நேற்று (11.12.2017) ஏற்பாடு செய்திருந்த உதைப்பாந்த போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அன்மைக்காலமாக புத்தெழுச்சியில்லாமல் காணப்படும் உதைப்பந்தாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இளைஞர்களிடத்தில் ஒற்றுமைகளை உருவாக முயற்சித்து இவ்வாறான உதைப்பந்தாட்ட நிகழ்வுகளை ஏற்படுத்திய அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக அமைப்பிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக நமது பிரதேச விளையாட்டு வீரர்களிடம் ஒற்றுமைகளும், விடுக்கொடுப்பு தன்மைகளும் நிலைநாட்டப்பட வேண்டும், விளையாட்டுப்போட்டிகளிடம் போது ஏற்படும் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு விட்டுக்கொடுக்கும் தன்மைகளை உருவாக்கிய வெற்றி தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் நமது விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என நான் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக சில நாட்களாக முழுமையாக இல்லாத நிலையில் இருந்த உதைப்பாந்தாட்ட போட்டில் மீண்டும் புத்தெழுச்சி பெற்றதது எமக்கும் நமது பிரதேச மக்களுக்கும் பெறும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு விளையாட்டு வீரர்களின் துறைகளை ஊக்குவித்து அவர்களின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக நாம் எப்போது காணபட்டுவதுடன் அவர்களுக்கு உதவுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

நமது பிரதேசத்தில் உள்ள விளையாட்டு கழங்கள் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த பெறுபேருகளை நமது பிரதேசத்திற்காக பெறுவதும் முழு மூச்சாக செயற்படுவதை நான் அவதானிக்கின்றேன். அவ்வாறு கழங்கள் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் நமது பிரதேசத்தின் அபிவிருத்தி துறைக்காக உருவாக்கபட்ட அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக (ADS) அமைப்பின் இயக்குனர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் இவ்வேளை நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

இதன் போது இறுதிச்சுற்றுக்கு தெரிவான அட்டாளைச்சேனை சோபர் அணியும் சுப்பர் சொனிக் அணியும் இணை வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -